அவசரப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டாம்! – எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை!

ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (11:49 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதை தவிர்க்க ந்ய்ம்ஸ் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்புகள் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எய்ம்ஸ் பேராசிரியர் மற்றும் மருத்துவர்கள் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது கொரோனா பரவலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்