ஜனநாயகப் படுகொலைக்கு அதிமுக துணைபோயுள்ளது - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:35 IST)
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு  திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இணைய துண்டிப்பு முடக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு  மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது.  
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தததற்கு மாநிலங்களவையில் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இந்நிலையில்  காஷ்மீர் சட்டபிரிவை ரத்து செய்த பாஜக அரசுக்கு அதிமுக ஆதவளித்துள்ளது. எனவே அதிமுக என்ற பெயரை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என மாற்றிக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு  திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து ஜம்முவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இணைய துண்டிப்பு முடக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
எனவே, உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பியது. 
 
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேசியது பின்வருமாறு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதன் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தை கொலை செய்கிறது. இது நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது போல் இருக்கிறது என கூறினார். 
 
இதற்கு ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு, இது எமர்ஜென்சி இல்லை, அர்ஜென்சி. இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் வைகோ என்று கூறினார். இருப்பினும் வைகோ தனது கருத்தை அவேசமாக முன்வைத்தார். வைகோ பேசியதாவது, 
 
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடிவிட்டனர். இது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல் என அவேசமாக பேசினார். 
 
இதனையடுத்து தற்போது திமுக தலைவர் கூறியுள்ளதாவது :
 
’’ அதிமுக என்ற பெயரை  அகில இந்திய பாரதிய ஜனதா என மாற்றிக்கொள்ளலாம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது பாரதிய ஜனதா அரசு ஜனநாயகப் படுகொலை அரங்கேற்றியுள்ளது. இதற்கு அதிமுக துணைபோயுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து ஜனநாயகப்படுகொலை செய்துவிட்டனர் . காஷ்மீரை 2 யூனியனாக பிரிப்பது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பான ஜனாதிபதி அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும்’’ இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்