70 லட்சம் பேர்லாம் முடியாது! ஒரு லட்சம் பேர் ஏற்பாடு பண்றோம் – ட்ரம்புக்கு ஏமாற்றம்!

வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (12:09 IST)
டொனால்ட் ட்ரம்ப்
என்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்கள் என்று ட்ரம்ப் கூறி வரும் நிலையில் 70 லட்சம் பேருக்கு வாய்ப்பில்லை என அகமதாபாத் மாநகராட்சி கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார். பிப்ரவரி 24ம் தேதி இந்தியா வரும் அவர் குஜராத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தை சுற்றிப்பார்க்க இருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப் ”இந்தியாவில் என்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்கள் என மோடி கூறியுள்ளார்” என தெரிவித்தார்.

ஆனால் அகமதாபாத்தின் மொத்த ஜனத்தொகையே 80 லட்சத்துக்குள்தான் எனும்போது ட்ரம்பை வரவேற்க 70 லட்சம் பேர் வருவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள அகமதாபாத் நகராட்சி கமிஷனர் விஜய் நெஹ்ரா ”பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப்பை வரவேற்க 22 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு லட்சம் மக்கள் வரிசையாக நின்று வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்