இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓவிய மற்றும் கைவினை கலைஞர்கள் தங்கள் பொருட்களை, கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தும் ஹுனார் ஹாட் கண்காட்சி திருவிழா டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்குள்ள பதார்த்தக் கடைக்கு சென்ற அவர் லிட்டி சோக்கா என்ற சுவையான உணவை மிகவும் விரும்பி உண்டதாகவும், சூடான குல்ஹட் தேனீரை பருகியதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.