ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

Siva
திங்கள், 17 ஜூன் 2024 (17:10 IST)
தேர்தல் முடிந்து விட்டது, புதிய அரசும் அமைத்தாகிவிட்டது, இனி மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். குறிப்பாக மணிப்பூரில் உள்ள பிரச்சனையை உடனடியாக தீர்க்க மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்திருந்தார். 
 
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் அவர்களின் அறிவுரையை ஏற்று தற்போது மத்திய அரசு மணிப்பூர் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மணிப்பூரில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
 
ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மணிப்பூர் டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்