திருமணத்துக்கு பிறகு வன்கொடுமை குற்றமில்லை: உள்துறை அமைச்சகம்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:46 IST)
18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் திருமணத்துக்கு பிறகு வன்கொடுமைக்கு உட்பட்டால் அது குற்றமாகாது என்று உள்துறை அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மேற்கோள் காட்டியுள்ளது.


 

 
திருமணத்துக்கு பிறகு 15 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வன்கொடுமைக்கு உட்பட்டால் அது குற்றமில்லை என்று உள்துறை அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து விளக்கமளித்த உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:-
 
குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டிருந்தாலும், சமூகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைப்பெற்றுதான் கொண்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் கல்வி அடிப்படையில் நாட்டில் சமநிலை இல்லாததால் குழந்தை திருமணம் சமூகத்தில் ஒரு எதார்த்தமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
 
ஐபிசி பிரிவு 375இன் படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி வன்கொடுமையாகவே கருதப்படுகிறது. இருப்பினும் 2வது விதிவிலக்கின்படி 15 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுடன் அவளுக்கு திருமணமான ஆண் பாலியல் உறவு கொண்டால் அது வன்கொடுமையாக கருதப்படாது.

வெப்துனியாவைப் படிக்கவும்