எம்பி சீட் கொடுத்து தூக்கி விடும் பாஜக: காங். பிடியில் சறுக்கி விழும் ஜோதிராதித்யா?

வெள்ளி, 13 மார்ச் 2020 (17:06 IST)
பாஜக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு எம்பி சீட் வழங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் பிடியை இறுக்க துவங்கியுள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அக்கட்சியிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் விலகி பாஜகவில் இணைந்தார்.  
 
ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பிற்கு இடையே பாஜகவின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் ஜோதிராதித்யா. இன்று வேட்பு மனுதாக்கலும் செய்தார். 
 
ஒரு பக்கம் பாஜக இவரை வளர்த்து விட நினைத்தாலும், காங்கிரஸ் ஜோதிராதித்யா சிந்தியாவின் மீது உள்ள பழைய வழக்குகளை மீண்டும் தூசி தட்டி விசாசரணை வளையத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது.  ஜோதிராதித்யா சிந்தியா இதில் இருந்து தப்பிக்க பாஜக நிச்சயம் உதவும் என்றே தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்