8 நாட்களில் ரூ.8 லட்சம் கோடிகளை இழந்த அதானி.. மீண்டு வருவாரா?

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (18:29 IST)
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி கடந்த எட்டு நாட்களில் 8 லட்சம் கோடியை இழந்துள்ளதாகவும் அவர் மீண்டு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஹின்டன்பர்க் என்ற நிறுவனத்தின் அறிக்கை காரணமாக கௌதம் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்து கடந்த 8 நாட்களில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 8 லட்சம் கோடியை இழந்ததாகவும் கூறப்படுகிறது
 
2013ஆம் ஆண்டு அதானியின் சொத்து மதிப்பு 25 ஆயிரம் கோடி என்ற நிலையில் 2022ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 12 லட்சம் கோடியாக மாறியது. 
 
ஒன்பதே வருடத்தில் எப்படி எத்தனை மடங்கு உயர்ந்தது என்ற ஆச்சரியம் பலருக்கு இருந்த நிலையில் தற்போது 8 நாட்களில் 12 லட்சம் கோடியில் இருந்து 4 லட்சம் கோடி ஆக அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது. எட்டு நாட்களில் 8 லட்சம் கோடி இழந்த அவருக்கு சுமார் 2 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்