சார்ஜாவில் நடிகை கிரிசா என்பவர் கஞ்சா இருந்ததாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் தனது மகள் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் போலீஸ் புகார் அளித்தார். இந்த புகாரியின் அடிப்படையில் விசாரணை செய்ததில் அவரது வீட்டில் அருகில் வசித்த ஆண்டனி என்பவரின் தங்கைக்கும் நடிகை கிரிசாவுக்கு முன்பகை இருந்ததாகவும் இதற்கு பழி வாங்கவே ஆண்டனி தனது நண்பர் மூலம் கிரிசாவுக்கு கஞ்சா பொட்டலம் கொடுத்து அனுப்பி இதுகுறித்து போலீஸிடம் தகவல் தெரிவித்ததாகவும் தெரியவந்தது