நீங்களும் நானும் கிரீன் பார்க் ஹோட்டலில் : ஸ்ரீரெட்டியின் அடுத்த டார்கெட் முருகதாஸ்

புதன், 11 ஜூலை 2018 (18:34 IST)
சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லையை சந்தித்து வருவதாக தொடர்ந்து புகார் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தற்போது அந்த வரிசையில் இயக்குனர் முருகதாஸையும் சேர்த்துள்ளார்.

 
சினிமா துறையில் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கை அழைக்கும் பழக்கம் உள்ளது என நடிகைகள் தொடர்ந்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வான போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
பிரபல தெலுங்கு நடிகர் ஞானி உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார். தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று கூறியிருந்தார்.

 
இந்நிலையில், அவர் கூறியது இயக்குனர் முருகதாஸைத்தான் என பொருள் படும்படி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் “ ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ். உங்களுக்கு கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கிறதா? தெலுங்கு இயக்குனர் வெளிகொண்டா சீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். எனக்கு நல்ல கதாபாத்திரம் ஒன்றை கொடுப்பதாக வாக்களித்தீர்கள். நமக்குள் பலமுறை ........... நடந்தது. ஆனால், தற்போது வரை எனக்கு எந்த வாய்ப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை. நீங்களும் சிறந்த மனிதர்தான்” என பதிவிட்டுள்ளார்.
 
இதுவரை எந்த புகாரிலும் சிக்காமல் இருந்த இயக்குனர் முருகதாஸ் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியிருப்பது தமிழ் சினிமா உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்