நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்' திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்தவர் ஜெயசுதா. மேலும், அவர் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணசித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவரும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதருமான நிதின்கபூர் நேற்று முண்டினம் இரவு தற்கொலை செய்து கொண்டார்.
1995ஆம் ஆண்டு ஜெயசுதா-நிதின்கபூர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர். பிரபல தயாரிப்பாளரான நிதின்கபூர் சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயன் நடித்த ஒரு படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று கடும் மன உளைச்சலில் இருந்த அவர், அவர் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றள்ளார். மாடிக்கதவு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.