தாயை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற சச்சின்!? – மும்பையில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (13:18 IST)
பிரபல நடிகை வீணா கபூரை அவரது மகனே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் வீணா கபூர். பாலிவுட் திரைப்படங்கள், நாடகங்கள் பலவற்றில் நடித்த 74 வயதான வீணா கபூர் மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

முதல் மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகன் மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். வீணா கபூருக்கு சொந்தமாக ரூ.12 கோடி மதிப்பில் மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. அதை இரண்டாவது மகன் சச்சின் தனது பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு வீணா மறுத்ததால் ஆத்திரமடைந்த சச்சின் கிரிக்கெட் பேட்டால் வீணாவை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது பிணத்தை எடுத்து சென்று ஆற்றில் வீசியும் உள்ளார். பிரபல பாலிவுட் நடிகையை சொந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்