கரையான் தின்றுவிட்டதா? - காங். தலைவருக்கு ரூ.56.67 கோடி அபராதம்

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2016 (11:25 IST)
ஆவணங்களைக் கரையான் தின்றுவிட்டதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்விக்கு வருமான வரித்துறை ரூ.56.67 கோடி அபராதம் விதித்துள்ளது.


 

காங்கிரஸ் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கி உள்ளார். அதற்கு சிங்வி நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில், ’செலவு கணக்கு எழுதி வைத்த ஆவணங்களைக் கரையான் தின்றுவிட்டது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த கதையை தீர்வு ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், சிங்வி மூன்று ஆண்டுகளுக்குச் சமர்ப்பித்த வருமான வரி கணக்கு விவகாரத்தில் குழப்பம் இருப்பதாக வருமான வரித்துறை கருதியது.

குறிப்பாக, தனது வருவாய் மற்றும் செலவுகள் அனைத்தும் காசோலை வழியாகவே நடந்துள்ளது என்று சிங்வி விளக்கம் அளித்திருந்ததையும், செலவு கணக்கை அதிகரித்துக் காட்டி உள்ளதையும் வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

இந்நிலையில், அவருக்கு வருமான வரித்துறை தீர்வு ஆணையம் 56.67 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்