முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரிம் மரணம்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:19 IST)
இந்தியாவையே அதிர செய்த மோசடிகளில் ஒன்று போலி முத்திரைத்தாள் மோசடி. இந்த மோசடிக்கு மூளையாக இருந்த அப்துல்கரிம் தெல்கி என்பவருக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 202 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.



 
 
பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அப்துல்கரிம் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், எய்ட்ஸ் உள்பட பல நோய்களால் அவதிப்பட்ட அவர் சற்று முன்னர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்
 
56 வயதாகும் அப்துல்கரிம் சிறையில் இருந்தபோது லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகள் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்