இவர் சிபிஐ கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான டி ராஜாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் இருக்கும் நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் வேட்பாளரை போட்டியிடுகிறார்
அதுமட்டுமின்றி அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மனைவி என்பது இந்தியா கூட்டணி மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனி ராஜா தான் போட்டியிட்டார் என்பதும் ராகுல் காந்தி இந்த தொகுதியில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது