ஆதார் - பான் எண்ணை இணைக்க இறுதிக்கெடு: வருமான வரித்துறை எச்சரிக்கை
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:50 IST)
ஆதார் - பான் எண்ணை இணைக்க இறுதிக்கெடு: வருமான வரித்துறை எச்சரிக்கை
ஆதார் எண்ணை பாண் எண்ணுடன் இணைக்க மார்ச் 31 தான் இறுதி கெடு என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
கடந்த சில ஆண்டுகளாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது என்பதும் அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் தற்போது அபராதத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் அவ்வாறு இணையாவிட்டால் செயலிழந்து விடும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது தெரிந்ததே.
எனவே இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது