உலகப் புகழ்பெற்ற கோயில் திருப்பது ஏழுமலையான் திருக்கோயில். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதிலும் இருந்தும் வந்து இங்கு சாமி தரிசனம் செய்வார்கள். திருப்பதி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அங்கு பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டு தான்.
இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக லட்டு மற்றும் தங்கும் அறைகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இதனை பெற இனிமேல் ஆதார் கார்டு அவசியம் என அறிவித்துள்ளது தேவஸ்தானம்.
ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என நீதிமன்றம் பலமுறை கூறியும் மத்திய அரசு தங்களின் பல திட்டங்களை பெற ஆதார் கார்டு அவசியம் என்றே கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானமும் தங்களின் சேவையை பெற ஆதார் எண் அவசியம் என அறிவித்துள்ளது.
இலவச லட்டு, தங்கும் அறைகள் மற்றும் தரிசன டிக்கெட் உள்ளிட்டவைகளை பெற இனி ஆதார் எண்ணை பயன்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிப்படையான சேவை நடைபெறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.