இறந்தாலும் ஆதார் கட்டாயம்; சுழற்றி அடிக்கும் மத்திய அரசு

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (18:08 IST)
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இறப்பு சான்றிதழ் பெற ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


 

 
மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் அவசியமாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பான் மற்றும் வங்கி கணக்கோடு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. கேஸ் சிலிண்டர் முதல் ரேஷன் பொருட்கள் வரை பெற அனைத்திற்கும் இந்த ஆதார் காட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது மத்திய அரசு மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஒருவரின் இறப்பை பதிவு செய்ய அவரது ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்