இதற்கு மேல் ஆதார் அவசியமில்லை; மத்திய அரசு உத்தரவு

வெள்ளி, 12 மே 2017 (20:21 IST)
அனைத்து துறைகளிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வரும் மத்திய அரசு 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



 

 
வங்கி, வருமான வரி, மாநிலம் மற்றும் மத்திய அரசின் சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதை செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவித்து வந்தாலும், மத்திய அரசு ஆதார் எண்ணை வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது 80 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்