மறுபிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி!

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:14 IST)
மறுபிறவி எடுப்பதாக கூறிய தீக்குளித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் தும்கூர்  அருகே உள்ள் கொண்டவாடி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது மறுபிறவி எடுக்க இருப்பதாக கூறி வந்தார். இந்த நிலையில் திடீரென இன்று தான் மறுபிறவி எடுப்பதற்காக உயிரை விடப் போகிறேன் என்று கூறியவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்
 
 படுகாயங்களுடன் இருந்த அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அவ்வப்போது 'அருந்ததி'  பட பாணியில் மறுபிறவி எடுக்க இருப்பதாக கூறி வந்த இளைஞர் உண்மையாகவே தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்