நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்! வைரல் வீடியோ

புதன், 26 ஜூலை 2023 (20:54 IST)
சத்தீஸ்கர் மாநிலம் சித்திரக்கோட்டில் இளம்பெண் நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரகோட்  நீர்வீழ்ச்சியில்   ஜூலை 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை   அன்று இளம்பெண் ஒருவர்  நீர்வீழ்ச்சியின் முனைக்குச் சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அவரைப் பார்த்த அருகில் இருந்தோர். அவரை தற்கொலை செய்ய வேண்டாமென கூச்சலிட்டனர். ஆனால், யாருடைய பேச்சையும் கேட்காமல் அவர்  குதிக்க முயன்றார்.

நீர்வீழ்ச்சியில் அப்பெண் குதித்த நிலையில், அப்பெண்  மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அபெண்ணிடம் போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். அதற்கு அவர்,'' மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துவதால் வீட்டில் தன்னை பெற்றோர் எப்போதும் திட்டிக் கொண்டே இருந்ததால், மனமுடைந்து  நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக'' கூறினார்.

அப்பெண்ணுக்கு அறிவுரை அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் வீட்டில் பெற்றோர் திட்டிக் கொண்டே இருப்பதால் மனமுடைந்து,

 
https://sharechat.com/post/Ab4rJrjv?referrer=copyLink

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்