வேலைக்குச் சென்ற மனைவியை கொடூரமாகத் தாக்கிய கணவன் கைது

வியாழன், 20 அக்டோபர் 2022 (19:26 IST)
குடும்ப வறுமைக்கு மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் மனைவி ஆதீராவை கொடூரமாக தாக்கி சித்ரவை செய்த துன்புறுத்தி செல்ஃபி எடுத்த கணவன் திலீபின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மா நிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மலையன் கீவு என்ற பகுதியில் வசித்து வருபவர் திலீபன்(27(. இவருக்கு ஆதிரா என்ற மனைவியும்,இரு குழந்தைகளும் உள்ளனர்.

திலீபன் சரியாக வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தையும் கவனிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே குடும்ப வறுமையை போக்கவும் கடனை தீர்க்கவும்அருகிலுள்ள சூப்பர் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார் ஆதிரா. கடந்த 17 ஆம் தேதி குடிபோதையில் வீட்டிற்கு வந்த திலீபன், தன் மனைவி ஆதிரா வேலைக்குச் செல்வது பிடிக்காமல்,  மனைவியை கடுமையாகத்தாக்கி செல்ஃபி எடுத்துள்ளார்.

மேலும், நான் போதையில் இருந்தாலும் நியாயமான காரியம் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுட்து போலீஸார் இவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்