காஷ்மீரிய பெண்கள் போராட்டம் உண்மையா?? வைரல் வீடியோவின் உண்மை பிண்ணனி என்ன?

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (13:30 IST)
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரிய பெண்கள் போராட்டம் நடத்துவது போல் வெளியான வீடியோவின் உண்மை தன்மை என்ன??

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பலரும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் இணையத்தளம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் யாரும் வெளியே கூடுவதற்கான தடையும் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக காஷ்மீரிய பெண்கள் பலர் தங்களுடைய நிலத்தை பாதுகாத்துக் கொள்ள வீதிகளில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதன் உண்மை பிண்ணனி தற்போது தெரியவந்துள்ளது.

அந்த வீடியோ இந்த ஆண்டு மார்ச் மாதம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ என்றும், அந்த வீடியோவில் இடம்பெற்ற பெண்கள், பாரமுல்லா சென்ட்ரல் கோ ஆப்ரேடிவ் வங்கி அமைந்துள்ள ஹஜன் பகுதியில் போராட்டம் நடத்துகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆதலால் இந்த பெண்கள் போராட்டத்திற்கும் காஷ்மீரின் அந்தஸ்து ரத்து செய்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்