பெற்ற தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த பேராசிரியர்

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (15:54 IST)
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தாயை அவரது மகனே மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத்  மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஜெர்ஸ்ரீபென் நன்வனி (64). இவர் மகன் சந்தீப்புடன்  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சந்தீப் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சந்தீப்பின் தாய் வயது முதிற்சியின் காரணமாக நோய்வாய்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நன்வனி வீட்டில் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இது வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நன்வனியை அவரது மகன் சந்தீப் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும், அவருக்கு பணிவிடை செய்வதுமாய் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதனால் வெறுப்படைந்த சந்தீப் தனது தாயை கொலை செய்ய முடிவு செய்து, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை வலுக்கட்டாயமாக மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது போலீசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்