ஒடிசா கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் பிஜு ஜனதாதளத்தின் தலைவராகவும் இருக்கும் நவீன் பட்நாயக் மீது ஒரு பெண் முட்டைகளை வீசிய பரபரப்பு சம்பவம் அடங்குவதற்கு உள்ளேயே, இடைத்தேர்தலுக்காக பிஜப்பூர் சட்டசபை தொகுதி பிஜு ஜனதாதளம் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் மீது வாலிபர் ஒருவர் திடீரென தனது 2 ஷூக்களையும் கழட்டி முதல்வரை நோக்கி வீசினார். நவீன் பட்நாயக்கின் பாதுகாவலர் அதனை தடுத்தார். அதிர்ஷ்டவசமாக முதல்வருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.