எப்படியாவது அதிமுகவை கைப்பற்றும் முடிவில் இருக்கும் டிடிவி தினகரன், தற்போது எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டதால், கண்டிப்பாக முதல்வர் பதவிக்கு குறி வைப்பார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “தேர்தல் நடந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் “ தினகரன் சரியாகத்தான் கூறியிருக்கிறார். அமைச்சர்கள் 6 பேரைத் தவிர யார் வந்தாலும் எங்களுடன் சேர்த்துக் கொள்வோம். மற்ற எம்.எல்.ஏக்கள் ஒத்துழைத்தால் இந்த ஆட்சி இன்னும் 3 வருடங்கள் நீடிக்கும்” என அவர் கூறினார். அப்போது நீங்கள் முதல்வராக வாய்ப்பிருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அவர் “ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் எல்லாம் முதல்வராகும் போது நான் முதலமைச்சராகக் கூடாது?” எனக் கேள்வி எழுப்பினார்.