குரங்கு ஒன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் காவலரின் தோள் மீது ஏறி அமர்ந்து பேன் பார்க்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஸ்ரீகாந்த திவேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியின் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் தனது வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது குரங்கு ஒன்று அவர் மீது ஏறி உட்கார்ந்து அவர் தலையில் பேன் பார்க்க துவங்கியது.
இதை எதையும் அந்த காவலர் கண்டுக்கொள்ளாமல் தனது வேலை மீது கவனத்தை செலுத்த, அந்த குரங்கும் தனது பேன் பார்க்கும் வேலையை பார்க்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.