திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்த சன்னி, சஞ்சய், பிரீத்தி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.
அதில் ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் வந்திருந்த பெண்ணும் தங்க ஆபரண நகைகளை அணிந்திருந்தார். கழுத்து மட்டுமின்றி கைகளிலும் அந்த ஆண்கள் இருவரும் நகை அணிந்திருந்தனர். அவர்கள் அணிந்திருந்த நகைகள் மட்டும் மொத்தம் 25 கிலோ தங்க நகைகள் ஆகும்.
அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து வந்த அவர்களை பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் சிலர் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.