கொரோனாவை தடுக்கும் மெத்தை: விளம்பரம் செய்த நிறுவனம் மீது வழக்கு

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (18:51 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் ஒருபக்கம் அச்சத்துடனே பொது மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற கொடூர புத்தியுடன் ஒரு சிலர் செயல்பட்டு வருகின்றனர்
 
கொரோனா வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் இந்த மெத்தையை வாங்கினால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்றும் இதில் ஆன்ட்டி கொரோனா மருந்து உள்ளது என்றும் செய்தித்தாள் ஒன்றில் விளம்பரம் வெளியானது 
 
இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொரோனா வைரஸை வியாபாரத்துக்கு பயன்படுத்தி வருவதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகைப்படம் வைரல் ஆனதை அடுத்து இந்த கடையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
கொரோனாவை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஆய்வுகளை செய்து வரும் நிலையில் எந்தவித ஆதாரமின்றி கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மெத்தை என பொய்யான விளம்பரத்தை செய்த இந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்