பட்டப்பகலில் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை

ஞாயிறு, 3 ஜூன் 2018 (10:30 IST)
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் குர்தீப் பெஹல்வான். இவருக்கும் ஜக்கு பாக்வான் பூரியா என்ற ரவுடிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஜக்கு பாக்வான் குர்தீப்பை தீர்த்துக்கட்ட திட்டமிட்டான்.
 
இதனையடுத்து கோல் பாக் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த குத்துச்சண்டைப் போட்டியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குர்தீப் பெஹல்வானை இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், 7 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் அவர் பரிதாமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். கவுன்சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்