35 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை.. 18 மணி நேர போராட்டம்! - உயிருடன் கொண்டு வந்த மீட்பு படையினர்!

Prasanth Karthick

வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:47 IST)

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை 18 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

 

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள டௌசா என்ற பகுதியில் நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக அருகே இருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 

 

உடனடியாக அந்த இடம் விரைந்த மீட்பு படையினர் குழந்தையை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர். குழந்தை 35 அடி ஆழத்தில் சிக்கியதாக கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து குழந்தை ட்யூப் வழியாக ஆக்ஸிஜன் சுவாசம் அளித்துக் கொண்டே குழந்தையை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

 

இதற்கு முன் இதுபோல ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை வெற்றிகரமாக மீட்ட கிஷன்கர் பகுதியை சேர்ந்த தேசிய மீட்புப்படை குழுவினரும் அந்த இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் 18 மணி நேரம் கழித்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்