வயநாடு நிலச்சரிவை முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு.. 2 தினங்களுக்கு முன் உடல் மீட்பு

Siva

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (11:21 IST)
வயநாடு நிலச்சரிவு குறித்து முதன்முதலாக மீட்பு படையினருக்கு தகவல் அளித்த பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிர் இழந்துள்ளதாகவும் அவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலை வயநாடு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்ட சில நிமிடங்களில் சூரல்மலை  கிராமத்தை சேர்ந்த நீது ஜோஜோ என்பவர் தான் முதன் முதலில் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த நீது ஜோஜோவின் உடல் இரண்டு தினங்களுக்கு முன்  மீட்கப்பட்டுள்ளதாகவும்   தெரிகிறது.

அவரது கணவர், மகன் மற்றும் பெற்றோர் உயர் தப்பிய நிலையில் அவர் மட்டும் மண்ணில் புதைந்து உயிரிழந்து உள்ளார்.  நிலச்சரிவு ஏற்பட்ட சில நிமிடங்களில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல முடிந்ததாகவும் பல உயிர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் கூறப்படுவது.

அவ்வாறு முதன் முதலில் தகவல் கொடுத்த நீது ஜோஜோ தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனது பெரும் துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்