உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், இஸ்லாமிய பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைப் பார்க்க உறவினர் ஒருவர் வந்துள்ளார். அங்கு, தொழுகையில் ஈடுபட்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யயப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அடிக்கடி, சர்ச்சைகள் உருவாகி வரும் நிலையில், தற்போது, மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, பிரக்யாராஜில் வசிக்கும் ஒரு இஸ்லாமியப் பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டிருந்த நிலையில், அவரை உறவினர் ஒரு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையடுத்து, அவரது உறவினர் மருத்துவமனைக்கு வந்து, அவரைப் பார்த்தபோது, மருத்துவமனை வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்ட காரணத்திற்காக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.