சட்டப் பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய எம்.எல்.ஏ- வைரலாகும் வீடியியோஅ

சனி, 24 செப்டம்பர் 2022 (14:28 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நடந்த சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது, ஒரு பாஜக எம்.எல்.ஏ ஆன்லைன் ரம்மி விளையாடியது சர்ச்சையாகி யுள்ளது.

இந்தியாவில்  ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு, பண நெருக்கடி ஏற்பட்டு, தற்கொலை கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் பிரபல   நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அமாசிடமாக இருப்பதற்கு விமர்சனங்கள் எழுந்தது வருகிறது.

இந்த  நிலையில், உ.பி., பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் கோஸ்வாமி சட்டசபையின் விவாதத்தின்போது, தன்  இருக்கையில் அமர்ந்தபடி,  ஆன்லைன் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்