ஈவிடீசிங் செய்த வாலிபரை கண்டித்தவர் கொடூர கொலை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (16:00 IST)
கேரளாவில் உறவுக்கார பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என்று கண்டித்த ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் நாகரிகமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக குற்றச் சம்பவங்கள் நாளுக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
 
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜித்,  ஆட்டோ டிரைவர். சுஜித்தின் உறவு பெண் ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த மிதுன் என்ற வாலிபர் ஈவ்டீசிங் செய்து உள்ளார். இதுபற்றி சுஜித்திடம் அந்த பெண் கூறி அழுதார். உடனே மிதுனை அழைத்து சுஜித் கண்டித்தார். 
 
அதன்பிறகும் மிதுன் அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளார். மீண்டும் மிதுனைக் கண்டித்தார் சுஜித். அப்போது திடீரென்று மிதுன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சுஜித்தை சரமாரியாக குத்திவிட்டு ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த சுஜித் ரத்தவெள்ளத்தில்  உயிருக்கு போராடினார். 
 
பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மிதுனை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்