போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர்

சனி, 20 அக்டோபர் 2018 (13:45 IST)
உத்திரபிரதேசத்தில் பாஜக கவுன்சிலர் ஒருவர் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்திரபிரதேசத்தில் பாஜக கவுன்சிலராக இருக்கும் மனிஷ், என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
 
இவரது ஹோட்டலுக்கு பெண் வழக்கறிஞருடன் வந்த காவல் அதிகாரி ஒருவர், உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த காவல் அதிகாரிக்கும், ஹோட்டல் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
 
அந்த நேரம் அங்கு வந்த மனிஷ், காவல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனிஷ், காவல் அதிகாரி என்றும் பாராமல் அவரை சரமாரியாக அடிக்க துவங்கியுள்ளார். மனிஷ் காவல் அதிகாரியை தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
இதையடுத்து போலீஸார், காவல் அதிகாரியையே தாக்கிய மனிஷ் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்