டெல்லியில் 92 வயது நபர் ஒருவர் "டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ.2.2 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில், போலீசார் அதிரடியாக செயல்பட்டு இரண்டு பேரை கைது செய்து, மொத்த பணத்தையும் மீட்டுள்ளனர் என வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், டெல்லியில் 92 வயது நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு, சைபர் குற்றவாளிகள் அவரை "டிஜிட்டல் அரெஸ்ட் என பயமுறுத்தி, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.2.2 கோடியை மோசடி செய்தனர்.
இது குறித்து அந்த நபர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், சைபர் செல் போலீசார் அதிரடியாக செயல்பட்டு, அமித், ஹரி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து முழு தொகையும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இவர்கள் இருவரும் சர்வதேச அளவில் செயல்படும் சைபர் மோசடி குழுவுடன் தொடர்புடையவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தை அந்த குழுவின் தலைவருக்கு அனுப்ப முயன்றதாகவும், ஆனால் அதற்கு முன்பு போலீசார் அந்த பணத்தை மீட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.