தேர்தலில் 64 கோடி பேர் வாக்களிப்பு.! வாக்காளர்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய தேர்தல் ஆணையர்கள்..!!

Senthil Velan

திங்கள், 3 ஜூன் 2024 (13:02 IST)
மக்களவை தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும், அதில் பெண் வாக்காளர்கள் 31 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. கருத்துக்கணிப்பில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறும் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள்  நாளை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாளைய தினமே மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரியவரும்.
 
இந்நிலையில் மக்களவை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மக்களவை தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். இதில் பெண் வாக்காளர்கள் 31 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் கூறினார். ஜனநாயக கடமை ஆற்றிய பெண் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
 
27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டார். 85 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளதாகவும், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்று தேர்தலை வெற்றிகரமாக ஆகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ: கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் கோலாகலம்..! நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.!
 
மக்களவைத் தேர்தல் பணியில் ஒன்றை கோடி பேர் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தேர்தலுக்காக 135 ரயில்கள் சிறப்புகள் விடுபட்டதாகவும் நான்கு லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்