வாயில் மது ஊற்றி சிறுமி பாலியல் வன்கொடுமை

வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:34 IST)
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெருங்கோடு பகுதியைச் சேர்ந்த சுஜித்(30) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.


 

 
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெருங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜித்(30). அதே பகுதியை சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று சுஜித் வீட்டி முன்பு நடந்து சென்றுள்ளார். 
 
அப்போது சுஜித் சிறுமியை வீட்டுக்குள் அழைத்து குளிர்பானம் என கூறி மதுவை கொடுத்துள்ளார். சிறுமி பிடிக்கவிலை வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் சுஜித் வலுக்கட்டாயமாக சிறுமியின் வாயில் மதுவை ஊற்ற, சிறுமி மயங்கியுள்ளார்.
 
சுஜித் அந்த சிறுமியை பலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமி அரை மயக்கத்தில் வீட்டிற்கு சென்று, பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
 
உடனே அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில சுஜித் மீது புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் சுஜித் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்