வரும் நிதியாண்டில் 5ஜி மொபைல் சேவைகள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:16 IST)
வரும் நிதியாண்டில் இந்தியாவில் 5ஜி மொபைல் சேவைகள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைகள் மட்டுமே இருந்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் 5ஜி சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன்ர்
 
 இந்த நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைகள் இந்த நிதியாண்டுக்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார்
 
தொலைத் தொடர்புத்துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இந்த அறிவிப்பு அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்