வங்கிகளோடு இணையும் தபால் அலுவலகங்கள்!!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:05 IST)
நாடாளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

 
அந்த வகையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அறிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் தபால் மற்றும் வங்கிகள் இணைந்து செயல்பட புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
அதோடு தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குகள் ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தபால் துறையை வங்கிகள் துறையோடு ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்