நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வட இந்திய மாநிலங்களான சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, நாகலாந்து தெலங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள காலியான சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் நடத்தப்படுகின்றன.
ஆனால் தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தோடு, அசாம், கேரளா, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இப்போது தேர்தல் நடத்தும் உள்ள சிரமங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.