500 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறதா ஓலா?

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:48 IST)
ஓலா நிறுவனம் 500 ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஓலா நிறுவனம் தற்போது இருசக்கர எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது என்பதும், அதற்காக ஏராளமான மென்பொருள் பிரிவில் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணியில் அமர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓலாவின் மென்பொருள் பிரிவில் இருக்கும் 500 பேரை பணி நீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
ஓலா எலக்ட்ரி ஸ்கூட்டர்கள் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை என்றும் கடந்த மார்ச் மாதம் நடந்த விற்பனையை விட பாதிக்கும் குறைவாகவே ஆகஸ்ட் மாதம் விற்பனையாகி உள்ளது என்றும் இதனால் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி செலவை குறைக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்