இரண்டாவது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்த அவர், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏதும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இதுவரை இதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.