35 சிவசேனா எம்.எல்.ஏக்கள் அதிருப்தி: மகாராஷ்டிராவில் மீண்டும் பரபரப்பு!

ஞாயிறு, 12 ஜனவரி 2020 (17:27 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று ஒரு மாதங்கள் கழித்த பின்னரே நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தற்போது முதல்வராக இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக உள்ளனர்
 
இந்த நிலையில் இந்த ஆட்சி ஐந்து வருடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தற்போது சிவசேனா கட்சியை சேர்ந்த 35 எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் நானே என்பவர் சமீபத்தில் பேட்டியளித்த போது ’சிவசேனா கட்சியிலுள்ள எம்எல்ஏக்களின் 56 பேர்களில் 35 பேர் அதிருப்தியில் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் ஆட்சிக்கு எதிராக திரும்புவார்கள் என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பனிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக பிரமுகரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்