நாட்டு மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் - ப. சிதம்பரம்

சனி, 11 ஜனவரி 2020 (18:30 IST)
நம் நாட்டு மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ப. சிதம்பரம், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 
 
ஏற்கமவே இதுகுறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்களான ரகுராம் ராஜன் மற்றும் பொருளாதார நிபுணர்கள்  அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துகள தெரிவித்துள்ளதை குறிப்பிட்டு பேசினார்.
 
மேலும், நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருவது குறித்து பலரும் விமர்சித்தாலும் கூட மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என விமர்சித்தார். தற்போது, நாட்டில் அச்சமும் சுதந்திரமும் ஒன்றாக இருக்க முடியாது. அச்சம் குறைந்து சுதந்திரம் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்