இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் நடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் 3 அலை வரும் பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதிக்குள் உச்சமடையும் என சென்னை ஐஐடி ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி கூறியுள்ளதாவது: வரும் பிப்ரவரி மாதம் 3 வது அலை தீவிரம் அடையும் எனவும் கொரொனா பரவலைக் குறிக்குய்ம் ஆர்- வேல்யு தற்போது 4 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஆர் வேல்யூ 2.9 என்ற வீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.