அதிமுகவை அடுத்து திமுகவுக்கும் செக்: ஜூலை 15-ல் 2G வழக்கின் தீர்ப்பு

வியாழன், 27 ஏப்ரல் 2017 (06:14 IST)
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டுமென்றால் இங்கு வலிமையாக இருக்கும் அதிமுக, திமுகவை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இதில் அதிமுகவை பொருத்தவரை சசிகலா, தினகரனை சிறைக்கு அனுப்பி ஓரளவுக்கு வெற்றி கண்டுவிட்ட பாஜக, தற்போது அடுத்தகட்டமாக திமுகவை குறி வைத்துள்ளது,





திமுக தலைவர் மகள் கனிமொழி மற்றும் முக்கிய தலைவர் ஆ.ராசா ஆகியோர் சம்பந்தப்பட்ட 2G வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலை 15ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு கனிமொழி, ராசா ஆகியோர்களுக்கு பாதகமாக வந்தால் திமுகவில் சலசலப்பு ஏற்படும் என்றும் அதனை பயன்படுத்தி திமுகவை உடைக்க பாஜக சதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்