இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாரான்பூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இளைஞர்கள் இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து பணி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர்களை தங்களது காரில் ஏற்க மறுத்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம் அனைவரையும் பதற வைத்தது. அடிப்பட்டவர்களை ஏற்றினால் கார் இருக்கைகளில் ரத்த கறையாகும். கழுவினால் ரத்த கறை போகும். அதன் பின் இரவு முழுவதும் நாங்கள் எங்கே உட்கார்ந்து இருப்போம் என போலீசார் கூறினர்.
அங்கிருந்தவர்கள் எவ்வளவோ கூறியும் போலீசார் கேட்கவில்லை. வெகுநேரத்திற்கு பின் மற்றொரு போலீஸ் வாகனம் வந்து இளைஞர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. ஆனால் இளைஞர்கள் பாதி வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ஷாரன்பூர் தலைமை கூறுகையில், இந்த விஷயத்தில் சம்பத்தப்பட்ட மூன்று போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றார். இரண்டு வாலிபர்களின் உயிர் போவதற்கு போலீசார் காரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.