கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

Siva

செவ்வாய், 20 மே 2025 (08:23 IST)
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் ஜோதிக்கு நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பின் அடிப்படையில் அவர் அடிக்கடி பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் தெரிகிறது.
 
இந்திய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு காசு வாங்கி கொடுத்து கூறியதாகவும் தகவல்கள் உள்ளன. மேலும், தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சராசரியாக, அவரது ஒவ்வொரு வீடியோவும் 50,000 பார்வையாளர்களைக் பெற்றதாகவும், மாதத்திற்கு 10 வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இதன் அடிப்படையில், அவருக்கு மாதம் 40,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு தகவல் சொன்னதற்காக கூட பணம் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது. அவருடைய மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
இதற்கு அத்துடன், YouTube மற்றும் பிராண்ட் விளம்பரங்களிலிருந்து வருமானம் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், அனைத்து வருமானங்களையும் அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்